»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

பங்கு சந்தையில் இப்போது

Wednesday, July 1, 2009

கனிகளின் மருத்துவம்

நோய் தீர்க்கும் காய்கனிகள்
முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள்.
அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன.தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும்,
பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம்
பிடித்திருக்கிறhர்;.
மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட
முடிந்துவிடுவது உண்டு.

தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால்
வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக்
கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும்,
அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை
சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத்
தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, Nப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.
இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து
உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த
நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு
அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும்
வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.
வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப்
பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும்.
இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது
உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள்,
கற்கள் கரைந்து ஓடும்.

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது.
வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில்
தடவினால் வலி குறைந்துவிடும்.

எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச்
சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன
இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி
வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல்
அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி,
வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக
இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று
மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது
சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.

முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள்
தவிர்க்கின்றன.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப
விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற
இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறhர்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை
சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.வாரம் ஒரு முறை காலி பிளவரும் சாப்பிடுங்க!

கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை
போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில்
சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து
சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச்
சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலி பிளவரில்
பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து
உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு
வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல்
தடுக்கலாம்.
முட்டிக்கு எண்ணெய் தடவுங்க!

பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் முட்டி "சொரசொர'வென இருக்கும். முட்டிக் கால்
போட்டு விளையாடுவது, கீழே விழுவது, வெயிலில் காய்வது போன்றவற்றால் ஏற்படும்
முட்டி "சொரசொர'வென மாறுகிறது. தினமும் காலையில் குளித்ததும், தலைக்குத்
தேங்காய் எண்ணெய் தடவும்போது கை மற்றும் கால் முட்டிகளில் எண்ணெயைத் தடவுங்கள்.
நாளடைவில் தோல் மிருதுவாகி விடும்.
மருதாணிப் பூ மகிமை!

முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும்
பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது
மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல. மருதாணிப் பூவின்
வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும்
அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும்.
கருகருவென்று கூந்தல் வளர!

செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம்
ஊறிக் குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு'வென அதிகமாய்
ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி
கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்
முகப் பராமாரிப்பு...

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி
இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில
வழிமுறைகள்...

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன்
காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது
எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும்.
முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி
நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு
ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய்
அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றhக கலக்கி முகத்தில் பூசி,
மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக
இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி,
மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு
சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால்
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை
முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும்
புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா? கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றhக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக
முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது
வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி
சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம்
மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும்,
வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும்
முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில்
ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத்
துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல
பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20
நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில்
இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின்
மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில்
இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில்
சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.
*நெஞ்சு சளி
*தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ
சளி குணமாகும்.
*தலைவலி
*ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு
அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
*தொண்டை கரகரப்பு
*சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில்
கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*தொடர் விக்கல்*
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல்
தீரும்.
--------------------------------------------------------------------------------
*வாய் நாற்றம்*
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை
வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
--------------------------------------------------------------------------------
*உதட்டு வெடிப்பு*
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து
உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*அஜீரணம்*
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து
ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------
*குடல்புண்*
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை
தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------
*வாயு தொல்லை*
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும்.
ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
*வயிற்று வலி*
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

--------------------------------------------------------------------------------
*மலச்சிக்கல்*
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல்
தீரும்.
--------------------------------------------------------------------------------
*சீதபேதி*
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*பித்த வெடிப்பு*
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு
குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*மூச்சுப்பிடிப்பு*
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து
வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள
இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*சரும நோய்*
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக
உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*தேமல்*
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து
குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*மூலம்*
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து,
சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*தீப்புண்*
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண்,
சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
*மூக்கடைப்பு*
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி,
பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில்
நீங்கும்.
--------------------------------------------------------------------------------
*வரட்டு இருமல்*
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

*தேங்காய் *எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, *பயத்தமாவை
*தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
*ஆரஞ்சு *பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து
சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம்
பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி* எலுமிச்சை *சாற்றை தடவ
வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு
பெறும்.
--------------------------------------------------------------------------------
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான
வெந்நீரில் ஒரு மூடி *எலுமிச்சை *பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் *தேன்
*கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
--------------------------------------------------------------------------------
நகங்களை வெட்டும் முன் *எண்ணெயை* தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை
வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
--------------------------------------------------------------------------------
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், *கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை
* கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால்
எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
--------------------------------------------------------------------------------
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் *தேயிலைத் தூளில் எலுமிச்சை* சாறை பிழிந்து,
தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
--------------------------------------------------------------------------------
*வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி* மற்றும் *குப்பைமேனி *இலைகளை காயவைத்து,
தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, *பாலில்* குழைத்து,
முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல்,
வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் *உப்பைப்* போட்டு, கண்களை
கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த
இடத்தில் *எலுமிச்சம்பழ சாற்றை* தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்
நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும்
இருந்தால் *ஆலிவ்
ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
இரவு படுக்கும் முன், *புதினா சாறு* இரண்டு தேக்கரண்டி, அரை மூடி *எலுமிச்சம்பழ
சாறு* ஆகியவற்றுடன் *பயிற்றம்பருப்பு* மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு
பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால்
ஏற்பட்ட தழும்பும் மறையும்.
--------------------------------------------------------------------------------
*ஆப்பிள் *பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால்
சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, *முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை,
சோளமாவு*அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.
காய்ந்தவுடன்
மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
--------------------------------------------------------------------------------
*மோரை* முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம்
புதுப் பொலிவடையும்.
--------------------------------------------------------------------------------
*பழுத்த வாழைப் பழத்தை* நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து
கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
--------------------------------------------------------------------------------
*ஆரஞ்சு பழத்தோலை* வெயிலில் காயவைத்து பொடி செய்து *பாலுடன் *கலந்து சருமத்தில்
தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
--------------------------------------------------------------------------------
*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி
குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
--------------------------------------------------------------------------------
*தேங்காய்ப் பாலுடன்* ஒரு டீஸ்பூன் *தேன்* கலந்து முகத்தில் ஐந்து நிமிடம்
மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
--------------------------------------------------------------------------------
*தக்காளி* பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப்
பசை குறையும்.
--------------------------------------------------------------------------------
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற
வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


நோய் தீர்க்கும் காய்கனிகள்

*மாம்பழம்*

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது
ரத்தம் அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய்
எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

*கொய்யா பழம்*

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின்
…சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.
மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன்
பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு
இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப்
பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில்
கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

*பப்பாளி*

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து
நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில்
உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள்
பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை
உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும்
பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி
பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நோpடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே
விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை
சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண
வாய்ப்பில்லை.

*அன்னாசி*

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில்
ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல
வியாதிகளை குணப்படுத்தும் அhpய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த
டானிக். நன்றhக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில்
தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க
செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி
வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள்
சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும்
நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை
நோய் குணமாகும்.

*விளாம்பழம்*

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு
சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன்
வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான
அனைத்து கோளாறுகளும் குணமாகும்.பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு.
எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை
உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி
இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

*மாதுளம் பழம்*

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால்
கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால்
மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம்
சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை
பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம்
அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிhpல் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.


*வாழைப்பழம்*

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம்
ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து
விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு
வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசாp
உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால்
கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தௌpவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல
ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும்
தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி
அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால்
வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன்
மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால்
இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு
தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றhது.

*ஆரஞ்சுப்பழம்*

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம்
உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக
வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர்
ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றhக
தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி,
பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை
கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

*திராட்சைப் பழம்*

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில்
காணப்படும். பொதுவாக சாpயாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில்
காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர்
சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை
நீங்கி நன்றhக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த
வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல்
போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளாpல் சிறிது சர்க்கரை
சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில்
மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு
வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும்.
வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற
வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை
நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை
மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி
இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள்
குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய
இடத்தில் நன்றhக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும்
தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகாpப்பால்
உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜPரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள்,
உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய
தொந்தரவு கள் வராது.

*பேரீச்சம்பழம்*

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும்,
இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய
ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று
நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல்
கெட்டிப்படும்.

*எலுமிச்சம்பழம்*

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீhpல் கலந்து
கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும்
களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே
களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன்
ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால்
கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும்
வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால்
நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.
நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட
ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும்.
காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள்
இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா
என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு
செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு
நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று
கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும்
நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜPரண சக்தியை கொடுத்து உணவில்
இருந்து சத்துக்களை பிhpத்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த
நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல்
தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது
ஆரோக்கியத்திற்கு நல்லது.
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய
ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு
எத்தனையோ காரியங்களைச் செய்கிறேhம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.

நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு
டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால்
ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச்
சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன்
குறையும்.

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில்
எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும்
சுத்தம் அடையும்.

விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு
வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள்,
முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து
வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த
எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறhகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம்
கூடும். ரோஜh இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு
வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக
உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.

உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக்
கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை
அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும்.
தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள்
உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.
உடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி

வாழைப்பூ, இது வியாதிகளுக்கெல்லாம் சஞ்சீவி போன்றது. சற்று துவர்ப்பாக
இருக்கும். பொடி யாக நறுக்கி சிறிது சுண்ணாம்பையோ அல்லது அhpசி கழுவிய
தண்ணீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக
இறங்கி விடும். அதன் பிறகு அதை அவித்து பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம். வெகு
சுவையாகவே இருக்கும்.

பேயன் வாழைப் பூவில் துவர்ப்பே இருக்காது. அதை அப்படியே (பட்டைகளை நீக்கி)
சமைத்துச் சாப்பிட லாம்.

இதைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் நீங்கும். ரத்த மூலம்
போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால் எhpச்சல் நீங்கும்.

வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச்
சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும்.

வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி
முதலிய வியாதி களுக்கு சஞ்சீவி போன்றது.

வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு
முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு
இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம் தொpயும்.

வாழைப்பூவை இடித்து சிற்றhமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எhpச்சல்
உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எhpச்சல் போகும்.

வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சீதளத்தை போக்கும் காய்

சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும்.
சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய்
ஆகும். தாகத்தை அடக்க வல்லது.

கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை
அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜPரணத்தை
உண்டாக்கி விடும்.

சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீhpய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய
விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை
இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.

ஆனால் சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி
சாப்பிட வேண்டாம்.

உடல் சூட்டை தணிக்கும் புடலங்காய்

இது சற்று நீரோட்டமுள்ள காய். ஆகை யினால் இது சூட்டு உடம்புக்கு ஏற்றதாகும்.
உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். குளிர்ந்த தேகத்துக்கு ஆகாது.

இது ஒரு சத்துள்ள உணவாகையால் கிடைத்தபோது வாங்கி சமைத்து உண்ணலாம்.

மேலும் இது பத்தியத்துக்கு மிகவும் சிறந்த காய். எளிதில் சீரணமாகி நல்ல பசியை
உண்டாக்கும். வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திhpதோஷத்தைப் போக்கும்.
வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை
அடக்கி வீhpய புஷ்டியைக் கொடுக்கவல்லது. இதனால் ஏற்படும் தீமைக்கு கடுகுப்
பொடி, கரம் மசாலா மாற்றhகும்.

இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்

உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்


குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி
என்று சொல் கிறேhம்.

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு.
குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம்
போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீhpய புஷ்டியை
ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எhpச்சல்,
தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில்
கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை
பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபாPத குணங்களை சாp செய்வதற்கு
சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால்,
வயிற்றுப் பையில் காணப் படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள்
நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும்,
நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன்
கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உhpத்து
சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிhp செய்து சாப்பிடலாம். கறி
செய்வதற்கும், சாம்பாhpல் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்


எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாற்றை சமையலில் பயன்படுத்துகிறேhம்.
சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் பொதிந்து
கிடக்கின்றன. அதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள்
வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ,
அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில்
நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்hpக் அமிலம் கிருமிகளை
அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து
உடலை கண்போல பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து
விடுபடலாம்.

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக்
ஆகும்.

உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்;தின் மூலம்
மனிதர்கள் பெற இயலும்.

இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும்
உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
ரத்தப் பெருக்கை தடுக்கும் கோவைக்காய்


கோவைக் காயை தொண்டைக் காய் என்று சொல்வதும் உண்டு. இது உடம்புக்கு குளுமை
செய்யும். கபத்தை ஒழிக்கும். இதை பருப்புடன் கலந்து கறி, கூட்டு, சாம்பார்
தயாhpக்கலாம். சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். கோவைக்காய் பித்தம், ரத்தப்
பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும்
நல்ல மருந்தாகும்.

கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் சீரணமாகாது. ஆனால் மூச்சு
இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை
குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக்
கட்டினால் புண் விரை வில் ஆறும்.

கோவை இலைச் சாறு, பித்தம், பாண்டு, ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப்
பயன் படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால்
ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றhகும்.
இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக்
காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச்
சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி
ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும்.
சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல
வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.
உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி
விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர்
சாப்பிடுவதே ஆகும்.
சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க


கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார்
உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத்
தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி
விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன்
சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது
நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக்
கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச்
சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக
கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும்.
விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில்
அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை
பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள்
மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட
பார்ப்பதில்லை. இதை பெற்றேhர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே
குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.


பத்தியக் காய்

கத்தாpக்காயில் பலவிதமான மாறுபட்ட வண்ணங்கள் உண்டு என்றhலும் சத்து என்னவோ
அனைத்திலும் ஒன்றுதான். எப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்தாpக் காய்கள் தான்
சிறந்தவை. முற்றிய கத்தாpக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும்.
தற்காலத்தில் விதையே இல்லாத கத்தாpக்காய்களையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைக்
கொண்டு சீக்கிரம் சமையல் செய்து விடலாம்.

கத்திhpக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள்
சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று
விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம்
வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப் படுபவர்கள் கத்தாpக்காயை சாப்பிட்டால் நல்ல
பலன் கிடைக்கும்.
மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை
கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.

இந்தக் காய் பலத்தையும் வீhpய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரும்.
பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றhக சுரக்கும். ஆனால் வாத
சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜPரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும்
இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.

குன்மம், அஜPரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர் களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை
சற்றுத் தேறியவர் களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றhக வேக வைத்து நீரை வடித்துவிடவும்.
கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக்
கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம்.
இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றhக அமையும். அதனுடைய தீமைகளை நீக்கி
முழு பலனையும் பெறலாம்.
உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி

இஞ்சித் துவையலை ருசி பார்க்காத வர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும்
இஞ்சியை தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறேhம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில்
அதிகமாக சேர்க்கிறhர்கள்.

இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றhலும் கபம், வாதம், சிலேத்துமம்
ஆகிய திhpதோஷங்களையும் போக்குகிறது. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை யும்,
வீhpய விருத்தியையும் தரும்.

ஞாபக சக்தியை வளர்க்கும். கல்லீலைச் சுத்தப்படுத்தும். வயிற்றில் சேர்ந்த
வாயுவைப் நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும்,
கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.

எலுமிச்சம் பழரசம் இந்துப்பு இரண்டையும் சேர்த்துப் போட்ட இஞ்சி ஊறுகாய்
கபத்தையும், வாதத்தையும் போக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய்களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய்
ஆகியவற்றையும் இஞ்சி போக்கும்.

நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப்படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம்
இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் ஒரு எச்சாpக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும்.
அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.
கசப்பு அமுதம்

பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறhர்கள். ஆனால்
கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறhக அமுதத்துக்கு
சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு
எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும்.

பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு
வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக
இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு
சுவையாக இருக்கும்.

இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை
தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது
புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால்
ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி
உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.

பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றhலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம்,
பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை
எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.

பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும்
பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த
சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம்
நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின்
குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க்
கடியின் விஷம் உடம்பில் ஏறhது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல
தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து
விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து
ஜனனேந்திhpயத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய்
தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து.

கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச்
சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச்
சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும்
நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச்
சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை
குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக்
கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.

பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய்
கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில்
உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு
நிரந்தரமாக குணம் ஆகும்.

அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின்
மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த
முடியும்.

தாது உற்பத்தியை பெருக்கும் முருங்கைக்காய்

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம்
சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும்
பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை
நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம்
என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில்
மருந்தாகிறது. அதுபற்றி சற்று விhpவாக காண்போம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய
இடங்களுக்கும் போடலாம்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து
சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும்
நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில்
நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும்
நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.

கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய
வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேக
வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு டம்ளர் எருமை
மோர் சாப்பிடு வது சீரணத்துக்கு உதவி செய்கிறது.

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார்
சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய்
ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும்
சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.
முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும்.
தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை
விதைக்கு முதலிடம் தரலாம். இதனை தவிர்ப்பதற்காகவே தாது விருத்தி லேகியத்தில்
சேர்க்கும்போது மலம் தள்ளக்கூடிய வேறு சில அயிட்டங்களையும் சேர்க்கிறhர்கள்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய
பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி
உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட
டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம்
வராமல் தள்ளிப்போகும்.

இது ரத்தபேதி, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றுக்கு மிகவும் உபயோகமானது.

முருங்கைப் பூ இருதயத்திலும் கல்லீரலிலும் வேலை செய்யக் கூடியது. ஆனால் இதற்கு
இருக்கும் மலக்கட்டுத் தன்மை காரணமாக மலத்தை இளக்கக் கூடிய வேறெhரு பொருளையும்
சேர்த்து சமையல் செய்வது நல்லது. அப்போதுதான் முழு பலனையும் பெற இயலும். மேலும்
இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை
உண்டு பண்ணக் கூடியதுதான் என்றhலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை.

முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து
காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது
கெட்டிப்படும்.
பசியை தூண்டும் பெங்களூர் கத்தரிக்காய்

இதை பொதுவாக சவ் சவ் என்று சொல்கிறேhம். இந்தக் காயை பருப்புடன் கலந்து
கறியாகவோ, சாம் பாராகவோ, கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடலாம். சுவையாகவே
இருக்கும். சமைப்பதற்கு பிஞ்சுக் காய்களே நல்லது. முற்றின காய்கள் வேண்டாம்.

முற்றின காயை கண்டுபிடிப்பது சிரமமான வேலை அல்ல. அது மேலே சொர சொரப்பாகவும்,
உள்ளிருக்கும் பருப்பு வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கும்.

பெங்களூர் கத்தரிக்காய் மேகத்தைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
எளிதில் ஜPரணம் ஆகும். பசியைத் தூண்டும் ஆற்றலுடையது.

மேலும் சுவாச காசம், ஷயம் முதலிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். உடல்
காங்கையையும் இது நீக்கும்.
ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம்.
அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள்
பரவலாக கிடைப்பதில்லை.

மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால்
உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன்
மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம்
கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்
கச்சல் பயன்படும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும்.
உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி
வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவை யலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக
கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும்.
வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல்,
இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு
சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றhலும் மலத்தை இறுக்கி விடும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி
உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜPரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை
நீங்கும்.

அவரைக்காய் - பயத்தங்காய்

அவரைக்காயில் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும்
காலத்தில் பத்திய உணவாக உட்கொள்ளலாம்.

இதைச் சமைத்து சாப்பிட்டால் உடலை உரமாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும்.
சூட்டுடம்புக்கு இது மிகவும் ஏற்ற காய் ஆகும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். அவர்களுக்கு மிகவும்
நல்லது.

*பயத்தங்காய்*

இது நல்ல உணவுப் பொருள். இதனுடைய சுபாவம் குளிர்ச்சி ஆகும். இந்தக் காய்
பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். காற்றை நீக்கும்.

இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். சுவையாக
இருக்கும். சற்று பிஞ்ஞாக சமைப்பதே நலம்.

ஆனால் ஒரு கண்டிஷன். இந்தக் காயை மருந்து உண்ணும் காலங்களில் கண்டிப்பாக
சாப்பிட வேண்டாம்.

*குளிர்ச்சி தரும் அத்திக்காய் *

அத்திக்காய் உடம்பு சூட்டுக்கு மிகவும் நல்லது. இதனை யும், பருப்பையும்
சேர்த்து சமைத்து சாப்பிடுவது நலம். முற்றின காயாக இருந்தால் மலத்தைப்
போக்கும். ஆனால் பிஞ்சுக் காயாக இருந்தால் மலத்தை கட்டி விடும்.

இதனால் மேகம், வாதம், உடல் வெப்பம், புண் ஆகியவை போகும். இதனுடன் சீரகம்
சேர்த்து சமைப்பது நல்லது. சில நேரங்களில் புதினாக் கீரையை இதனுடன் சேர்த்து
சமைக்கும் வழக்கமும் இருக்கிறது.

இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூல வாயு, மூலக் கிராணி,
ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும்.
மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.


உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்


சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள்
கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க
வேண்டும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை
குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகாpக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை
நீக்குவதுடன், எளிதில் ஜPரணமாகி வீhpய விருத்தியை உண்டாக்கும்.

பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள
அசுத்தத்தைப் போக்கும். பொpய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள்
கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷhயத்தைக் கூட இதுபோன்று
பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த
துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜPரண சக்தியை அதிகமாக்கும். சிறிது
உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக
இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும்
தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றhக அமையும்.வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

0 comments: